என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
  X
  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

  பெட்ரோல் விலையை குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி- பாஜக தலைவர் அண்ணாமலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா? என தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.
  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரான் அறிவித்தார். இதனால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.

  இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை  குறைத்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.

  கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல், மக்கள் நலன் கருதாத எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா? என தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

  இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

  இதையும் படியுங்கள்.. உஜ்வாலா திட்டத்தில் 12 சிலிண்டருக்கு தலா ரூ.200 மானியம்
  Next Story
  ×