என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அபாயம்
  X
  அபாயம்

  திண்டிவனம் அருகே போதை ஆசாமிகளால் விபத்து அபாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மது போதையில் அவர்களாலும் விபத்து ஏற்படுகிறது எனவே இரவு நேரங்களில் இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  திண்டிவனம்:

  திண்டிவனம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் சிவா.இவர் நேற்று பெலாகுப்பம் பகுதியில் இருந்து திண்டிவனம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது இவருக்கு எதிரே பெலாகுப்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை ஏற்படுத்திய நபர் விபத்து நடுந்தும் அங்கு நிற்காமல் பெலாகுப்பம் நோக்கி சென்றார். விபத்தில் காயம் அடைந்த சிவா வலியால் கதறி துடித்தார், இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்த்தனர்.

  பெலாகுப்பம் சாலை பகுதியில் தொடர் விபத்துகள் நடந்த வண்ணமாய் உள்ளது, இதற்கு பொதுமக்கள் பலர் கூறுகையில் இந்த பகுதியில் செல்வோர் பலர் மது போதையிலும்,கஞ்சா போதையில் செல்கின்றனர். அதனால் இவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி செல்கின்றனர்.மேலும் வண்ணாரப்பேட்டை, பெலாகுப்பம் இளைஞர்கள் சிலர் தங்கள் வாகனத்தை அந்த பகுதியில் வேகமாக ஓட்டுகின்றனர். இதனால் பெரும் விபத்துக்கு காரணம் என அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர் ஒருவர் கூருகிறார். இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது,

  மற்றும் இரவு நேரங்களில் மது குடிக்க இந்த பகுதியில் உள்ள சாய்லட்சுமி நகர், மற்றும் கிடங்கல் ஏரிக்கரை, பெலாகுப்பம் எல்லையிலும் பலர் வருகின்றனர் மது போதையில் அவர்களாலும் விபத்து ஏற்படுகிறது எனவே இரவு நேரங்களில் இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  Next Story
  ×