search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரூப் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    X
    குரூப் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 66 மையங்களில் குரூப் தேர்வு- மாவட்ட கலெக்டர் தகவல்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 5 வட்டங்களிலும் 66 தேர்வு மையங்களில் 19,612 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் -II மற்றும் குரூப் -IIA  தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-II மற்றும் குரூப் -IIA (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான) முதல்நிலைத் தேர்வு நாளை (21 ந் தேதி) முற்பகலில் நடைபெறவுள்ளது. அதன்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தேர்வுகள் சுமூகமாக நடத்திடவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இதர முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 5 வட்டங்களிலும் 66 தேர்வு மையங்களில் 19,612 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வில் முறைகேடுகள் ஏதும் ஏற்படாதவாறு தேர்வு கூடங்களை கண்காணித்திட துணை கலெக்டர் நிலையில் 5 பறக்கும் படை அலுவலர்கள், மற்றும் தாசில்தார் அல்லது துணை தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்கள் தலைமையில் 14 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுப் பொருட்கள் பாதுகாக்கப்படவுள்ள மாவட்ட, சார்நிலைக் கருவூலங்களுக்கும், சுற்றுக் குழுக்களுக்கும், தேர்வு நடைபெறவுள்ள 66 தேர்வு மையங்கள் என மொத்தம் 90 காவல்துறை அலுவலர்கள்

    பாதுகாப்பு மற்றும் வழிக்காவல் பணிகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல ஏற்றவாறு 21 ந் தேதி காலை 5 மணிமுதல் மாலை 3 மணிவரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மூலம் கூடுதல் பேருந்த வசதி ஏற்படுத்திடவும், தேர்வு நாளன்று காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரூப் தேர்வு எழுதும் நபர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகை தர வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் தேர்வு எழுத வரும் நபர்கள் தேர்வு எழுத அனுமத்திக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையத்தில் கைப்பேசி மற்றும் எந்த வகையான மின்னணு சாதனங்கள் கொண்டுவர அனுமதியில்லை.

    தவறாமல் தேர்வு அனுமதிச் சீட்டினை கொண்டுவர வேண்டும். தேர்வு எழுத அனைவரும் கண்டிப்பாக கருப்புநிற பந்துமுனை பேனாவை தேர்வு எழுதுவதற்கு எடுத்து வர வேண்டும். மேலும் தேர்வு மையம் மற்றும் தேர்வு தொடர்பான இதர சந்தேகங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உதவி மைய தொலைபேசி எண்கள் 04425300338, 25300339, 25300340, 18004190958 மற்றும் மின்னஞ்சல் முகவரி: Grievance.tnpsc@tn.gov.in  தொடர்பு கொண்டும் அறிந்து கொள்ளலாம்.

    தேர்வு எழுதுபவர்கள் கண்டிப்பாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, தமிழ்நாடு தேர்வாணையத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட மேற்பார்வையாளர் சசிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லி

    ஏஞ்சலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா, அனைத்து வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×