search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி நீதிபதி பிரித்தா பேசிய காட்சி.
    X
    தூத்துக்குடி நீதிபதி பிரித்தா பேசிய காட்சி.

    பிரச்சனைகளுக்கு தீர்வு காண இலவச சட்ட உதவி மையத்திற்கு வாருங்கள் - தூத்துக்குடி நீதிபதி பிரித்தா வேண்டுகோள்

    பிரச்சனைகளுக்கு தீர்வு காண இலவச சட்ட உதவி மையத்திற்கு வாருங்கள் என தூத்துக்குடி நீதிபதி பிரித்தா கூறினார்.
    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்ட சட்ட பணிகள் குழுவும் தமிழ்நாடு நுகர்வோர் பேரவையும் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம்  குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் தூத்துக்குடி சார்பு நீதிபதியுமான பிரித்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டு பேசியதாவது:-

    ஏழை, எளிய மக்கள் கடைக்கோடி தொண்டன் வரை அனைத்து தரப்பு மக்களும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தை அணுக வேண்டுகிறேன். அரசு மற்றும் தனியார் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் இலவச சட்ட உதவி மையம் மூலம் செலவே இல்லாமல் தீர்வு காணலாம். இதை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்த வேண்டும்.

    நீதிமன்றத்தில் இருந்து உங்களுக்கு நோட்டீஸ் வந்தாலும், பதில் அனுப்ப இலவச சட்ட மையத்தை அணுகலாம், காவல் நிலையத்தில் உங்களை அழைத்தால் கூட இங்கு வந்து சட்ட மையம் மூலம்விபரம் கேட்கலாம்.

    அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு, வரதட்சணை கொடுமை, சட்டம் மற்றும் சட்டம் சாராத பிரச்சனை இப்படி எல்லா பிரச்சினைக்கும் செலவே இல்லாமல் தீர்வு காண்பதுதான் இலவச சட்ட உதவி மையம் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை செல்வதற்கு அனைத்து செலவுகளையும் வட்ட சட்ட பணிகள் ஏற்றுக்கொள்ளும் கிராம மக்கள் இதை அதிகமாக பயன்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு நீதிபதி பிரித்தா பேசினார்.

    தமிழ்நாடு நுகர்வோர் பேரவை நிறுவனத் தலைவர் ஏ.வி.பி. மோகனசுந்தரம் முன்னிலை வகித்து நுகர்வோர் பாதுகாப்பு, சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் நீதிமன்றத்தை எவ்வாறு அணுகுவது என்பது பற்றியும் விரிவாக பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வக்கீல் கணேசன், பேரவையின் மாவட்ட கவுரவ ஆலோசகர் சுந்தர், திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா, குலசை நகர் நல ஆலோசகர் மாரிமுத்து, நிர்வாகிகள் பேச்சிமுத்து, வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் அருள்மணி, சட்ட தன்னார்வலர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×