search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோடர் இன மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்
    X
    தோடர் இன மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்

    தோடர் இன பெண்களுடன் நடனம் ஆடி அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட வாக்குறுதியில் 70 சதவீதத்தை ஒரே ஆண்டில் செய்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி, ஊட்டி உருவாகி 200-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் இருந்து புறப்பட்டு வேன் மூலம் ஊட்டிக்கு வந்தார். அப்போது மேட்டுப்பாளையம் அருகே நீலகிரி மாவட்ட எல்லையில் கலெக்டர் அம்ரித் அவரை வரவேற்றார். இதைத்தொடர்ந்து குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் தி.மு.க.வினர் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    குன்னூரில் திறந்த வேனில் நின்றவாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    நலத்திட்டங்கள் நிறைவேற்றம் நீலகிரி மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களிடம் நம்பிக்கை அதிகரித்து உள்ளது. நீங்கள் எந்த நம்பிக்கையோடு, எந்த உறவோடு தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தீர்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தற்போது ஆட்சி செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் செய்யாத நலத்திட்டங்களை ஒரே ஆண்டில் செய்து உள்ளோம். குறிப்பாக, பெண்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி கொண்டு வருகிறோம். வீடு தேடி வரும் கல்வித்திட்டம், மருத்துவ வசதி உள்பட பல்வேறு திட்டங்களை இந்த ஒரே ஆண்டில் நிறைவேற்றி இருக்கிறோம் என தெரிவித்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி தமிழகம் மாளிகைக்கு ஓய்வு எடுக்கச் சென்றார். அப்போது செல்லும் வழியில் தோடர் மந்துவில் தோடர் இன மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர். மேலும், அவருக்கு சால்வையை பரிசாக வழங்கினார். அப்போது தோடர் இன மக்களுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடனமாடினார். இதனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தோடர் இன பெண்கள் முதல்வர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். முதல்வர் வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×