என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  திண்டிவனம் அருகே மீன் பிடிக்க சென்ற கூலி தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டிவனம் அருகே மீன் பிடிக்க சென்ற கூலி தொழிலாளி உயிரிழந்தது குறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
  திண்டிவனம்:

  திண்டிவனம் அருகே ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி 45, இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 16-ந்தேதி மீன்பிடிக்க அருகே உள்ள ஏரிக்கரையில் மீன் பிடிப்பதற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து முனுசாமியை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.

  இந்த நிலையில் 17-ந்தேதி இரவு ஆத்தூர் ஏரிக்கரையில் ஏதோ உடல் மிதப்பதாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திண்டிவனம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பார்த்ததில் அவர் முனுசாமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் தீயணைப்பு உதவியுடன் அவரது உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
  Next Story
  ×