என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பரிசோதனை முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.
  X
  பரிசோதனை முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.

  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உயர் ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உயர் ரத்த அழுத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
  திருச்செந்தூர்:

  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உலக ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு உயர் ரத்த அழுத்த பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

   முகாமை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தொடங்கி வைத்தார். முகாமில் கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

   காயாமொழி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.சஜின்ராஜ், செவிலியர் லட்சுமி பிரியா, பகுதி சுகாதார செவிலியர் பிரேமா, மருந்தாளுனர் ராஜா, கிராம சுகாதார செவிலியர் ஜெயா ஆகியோர் மருத்துவ முகாமை நடத்தினர்.

   முகாம் ஏற்பாடுகளை கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை செய்திருந்தார். இதில் கல்லூரியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டனர்.
  Next Story
  ×