என் மலர்

  நீங்கள் தேடியது "Adhithanar College"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விழாவுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.
  • குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து ச.பசுங்கிளி பாண்டியன் விளக்கி பேசினார்.

  திருச்செந்தூர்:

  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். கணிதத்துறை தலைவர் ச.பசுங்கிளி பாண்டியன், குடியரசு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு குறித்து விளக்கி பேசினார். விழாவில் பேராசிரியர்கள் வேலாயுதம், பாலு, ரமேஷ், கதிரேசன், சேகர், கணேசன், அபுல்கலாம் ஆசாத், கவிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தேசிய மாணவர் தரைப்படை அதிகாரி சப்-லெப்டினென்ட் சிவமுருகன், கப்பற்படை அதிகாரி சப்-லெப்டினென்ட் சிவஇளங்கோ, அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் தேசிய படை மாணவர்கள் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.
  • வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் அந்தோணி சகாய சித்ரா சிறப்புரையாற்றினார்.

  திருச்செந்தூர்:

  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் இக்கல்வி ஆண்டிற்கான தொடக்க விழா கல்லூரியில் நடைபெற்றது.

  விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் சு.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் அந்தோணி சகாய சித்ரா சிறப்புரையாற்றினார். முன்னதாக திட்ட அலுவலர் ஆங்கிலத்துறை பேராசிரியர் மோதிலால் தினேஷ் வரவேற்புரையாற்றினார். மாணவர் சாகுவேல் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர் வேலாயுதம், ரமேஷ், டாக்டர் மாலை சூடும் பெருமாள், சிவமுருகன், மருதையாபாண்டியன், ராஜேஷ் பெனட், ராஜ்பினோ, ஸ்ரீதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறப்பு விருந்தினராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி கலந்து கொண்டார்.
  • விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  திருச்செந்தூர்:

  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் யு.ஜி.சி.யின் வழிகாட்டுதல்படி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அகதர மதிப்பீட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அ.அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார், மூத்த பேராசிரியர் ரா.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

  சிறப்பு விருந்தினராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஆசிரியர்கள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அதன் மூலம் மாணவர்களுக்கு தேவையானவற்றை ஆசிரியர்களால் வழங்க முடியும் என்றார். விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் பென்னட் நன்றி கூறினார்.

  இதேபோன்று, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அணி எண்.48 மாணவர்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கலை நயத்துடன் வாழ்த்து அட்டைகள் செய்திருந்தனர். அவர்கள் கல்லூரியில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களுக்கும் வாழ்த்து அட்டை மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியை கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் கவிதா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நடைபெற்றது.
  • 50 பேர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டினர்.

  திருச்செந்தூர்:

  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மற்றும் வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழாவை கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

  கல்லூரி சுயநிதிப்பிரிவு நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.231 மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வ தொண்டர்கள் 50 பேர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டினர்.

  விழாவில் வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜெகதீஷ், கிராம நிர்வாக அலுவலர் வேல்ஜோதி, பஞ்சாயத்து செயலாளர் பட்டுகனி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆலோசனையின்பேரில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன், இளையோர் செஞ்சிலுவை சங்க அலுவலர் பார்வதிதேவி ஆகியோர் செய்து இருந்தனர்.

  ×