திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் குடியரசு தின விழா

விழாவுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து ச.பசுங்கிளி பாண்டியன் விளக்கி பேசினார்.
விழாவில் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். கணிதத்துறை தலைவர் ச.பசுங்கிளி பாண்டியன், குடியரசு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு குறித்து விளக்கி பேசினார். விழாவில் பேராசிரியர்கள் வேலாயுதம், பாலு, ரமேஷ், கதிரேசன், சேகர், கணேசன், அபுல்கலாம் ஆசாத், கவிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தேசிய மாணவர் தரைப்படை அதிகாரி சப்-லெப்டினென்ட் சிவமுருகன், கப்பற்படை அதிகாரி சப்-லெப்டினென்ட் சிவஇளங்கோ, அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் தேசிய படை மாணவர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com