search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Red Cross"

    • இளையான்குடி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்க புத்தாக்க பயிற்சி நடந்தது.
    • செஞ்சிலுவை சங்க தலைவர் கலந்துகொண்டு செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் புத்தாக்க பயிற்சி நடந்தது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் பகீரத நாச்சியப்பன் கலந்துகொண்டு செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து பேசினார். பொருளாளர் ராமமூர்த்தி ''மனிதம் செம்மையுற மனவளக்கலை'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். செயலாளர் அனந்த கிருஷ்ணன் ''காலத்தால்' செய்யும் முதலுதவி'' என்ற தலைப்பில் பேசினார். இதில் செஞ்சிலுவைச்சங்க மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். செஞ்சிலுவைச்சங்க திட்ட அலுவலர் நர்கீஸ் பேகம் நன்றி கூறினார்.

    • தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.
    • வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் அந்தோணி சகாய சித்ரா சிறப்புரையாற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் இக்கல்வி ஆண்டிற்கான தொடக்க விழா கல்லூரியில் நடைபெற்றது.

    விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் சு.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் அந்தோணி சகாய சித்ரா சிறப்புரையாற்றினார். முன்னதாக திட்ட அலுவலர் ஆங்கிலத்துறை பேராசிரியர் மோதிலால் தினேஷ் வரவேற்புரையாற்றினார். மாணவர் சாகுவேல் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர் வேலாயுதம், ரமேஷ், டாக்டர் மாலை சூடும் பெருமாள், சிவமுருகன், மருதையாபாண்டியன், ராஜேஷ் பெனட், ராஜ்பினோ, ஸ்ரீதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

    ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
    சனா :

    ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின் பெரும்பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்களும், அதனுடைய கூட்டணி படையினரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ஏமன் அதிபர் மன்சூர் ஹாதி வெளிநாடு தப்பி சென்றுவிட்டார்.

    ஏமனில் மீண்டும் மன்சூர் ஹாதி அரசை அமைக்கும் நோக்கில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சன்னி இஸ்லாமியர்கள் கூட்டணி மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் கடந்த 3 ஆண்டுகளாக ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருகிறது.

    ஏமனின் முக்கிய பகுதியான ஹூடேய்டாவில் உள்ள மருத்துவமனை, மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்கள் சந்தையில் சவுதி கூட்டணி படைகள் கடந்த2-ம் தேதி தாக்குதலில் ஈடுபட்டன. இதில், பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியது. 

    இந்நிலையில், ’இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது, தாக்குதல் நிகழ்ந்தற்கான சூழ்நிலை குறித்து இன்னும் துல்லியமாக கண்டறியப்படவில்லை.  பொதுமக்களின் வாழ்க்கையும் அவர்களின் சொத்துக்களும் மரியாதை குறைவான நிலையில் நடத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது’ என ஏமனுக்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின் தலைவர் ஜோன்னேஸ் ப்ரூவர்இன்று தெரிவித்துள்ளார். 
    ×