search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Innovation training"

    • சுகாதார உணவு உட்கொள்ள செய்தல் குறித்து விளக்கம்
    • உணவுப் பொருட்களை பாதுகாக்க வேண்டும்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளி சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், துரை ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மனிதவளமேம்பாட்டு அலுவலர் முனிராஜ், சுகாதார மேற்பார்வை யாளர் முத்துக்கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் கலந்து கொண்டு, பயிற்சி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஜோலார்பேட்டை வட்டாரத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளின் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    இதில் பள்ளிகளில் மாணவர்க ளுக்கு சமைக்கப்படும் உணவுகள் எவ்வாறு சமைக்க வேண்டும், உணவுப் பொருட்களை பாதுகாப்பது எப்படி, சுகாதார உணவு உட்கொள்ள செய்தல் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சி தொடக்க விழா நடந்தது.
    • முதலாண்டு துறை டீன் ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைகழகத்தில் 39-வது பேட்ச், 2023-24 பி.டெக் என்ஜினீயரிங் மாணவா்களுக்கான 10 நாள் புத்தாக்க பயிற்சி ெதாடக்க விழா பல்கலை வேந்தா் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

    இணைவேந்தர் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர்கள் சசி ஆனந்த், அா்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். துணைவேந்தர் நாராயணன் வரவேற்றார். பதிவாளா் வாசுதேவன், முதலாண்டு துறை டீன் ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சென்னை கொடாய்டு இன்னவேசன் வர்த்தக செயல்பாட்டு இயக்குநா் ராம்சந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தாக்க பயிற்சிகளை தொடங்கி வைத்தார். மாணவா் சோ்க்கை அதிகாரிகள் டீன் லிங்குசாமி, ராஜூ பேசினா். முடிவில் மாணவா் நல இயக்குநா் சாம்சன் நேசராஜ் நன்றி கூறினார்.

    • இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் மற்றும் புத்தாக் கப்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
    • கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் மற்றும் புத்தாக் கப்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழா வுக்கு இயற்பியல்துறை தலைவர் முஸ்தாக் அஹமது கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அஹ மது ஜலாலுதீன் தலைமை தாங்கினார்.

    கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான், ஆட்சிக்குழு உறுப்பி னர் ஹமீத் தாவூத், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம் மது முஸ்தபா ஆகியோர் வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி னராக திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரி, மேனாள் துணை முதல்வர் முஹம்மது சஹாபுதீன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். கல்லூரி முதல் வர் ஜபருல்லாஹ் கான் முதலாமாண்டு மாணவ-மாணவியருக்கு கல்லூரி விதிமுறைகள் குறித்து எடுத் துரைத்தார்.

    நிகழ்வில் 2019-ம் முதல் 2022-ம் ஆண்டு வரை பல்கலைக்கழக ரேங்க் பெற்ற மாணவ-மாணவி களுக்கு பதக்கம் வழங்கப்பட் டது. நிகழ்ச்சியில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்ரப் அலி மற்றும் அப்துல் சலீம், இளையான் குடி ஊர் பிரமுகர்கள் முஹம்மது ஹுசைன், முசாதிக் அலி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், பேரா சிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர், பெற் றோர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கிர் நன்றி கூறினார்.

    • கல்வி அலுவலர் ஆலோசனைகள் வழங்கினார்
    • ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில்,அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக முதுகலை ஆசிரியர்களுக்கான ஆயத்த புத்தாக்க பயிற்சி ராணிப்பேட்டை தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    இந்த கல்வி ஆண்டில் ஆசிரியர்கள் பாடங்களை குறித்த நேரத்தில் நடத்துவது, நடத்தி முடித்த பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்களை தயாரித்து தொடர் தேர்வுகள் வைத்து மாணவர்களின் கற்றல் திறனை கண்காணிப்பது, பாடவாரியாக மாணவர்களின் கற்றல் திறனை தலைமை ஆசிரியர் மூலம் கண்காணிக்க செய்வது உள்பட கற்றல் திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு 100 சதவித தேர்ச்சி பெற முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தற்காலிக ஆசிரியர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புத்தாக்க நிகழ்ச்சி நடந்தது.
    • அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    உடுமலை :

    பள்ளி படிப்பு முடித்து கல்லூரியில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புத்தாக்க நிகழ்ச்சி உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி., கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. இதில் தேவதானூர், ஜல்லிபட்டி, இளைய முத்தூர் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளை சேர்ந்த அரசுப்பள்ளிகளில் பயிலும் 130 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். கணினி பயன்பாட்டு துறைத்தலைவர் மணிமேகலை கல்லூரியின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார். தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் செடிபவுன் சரியான கல்லூரியை தேர்ந்தெடுப்பது குறித்தும் கல்லூரிகளில் பாடப் பிரிவினை தேர்ந்தெடுப்பது குறித்தும் பெற்றோரிடம் மனம் விட்டு பேசுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்.

    கல்லூரியில் பயிலும் மாணவிகள் விஷ்ணு பிரியா , மீனாட்சி ,அபிநயா, காளீஸ்வரி ஆகியோர் கல்லூரியில் இருக்கும் வசதிகள் குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும்விடுதிகள் குறித்தும் கல்லூரியின் சிறப்பம்சங்கள் குறித்தும் பேசினர். இயற்பியல் துறை இணை பேராசிரியரும் கல்லூரி மாணவர் சேர்க்கை குழு ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ஆர்.எம்., நன்றி கூறினார். நிறைவாக மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்கள் ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் சேர்க்கை குழு ஒருங்கிணைப்பாளர் எஸ். அறம் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மற்றும் அரியலூர் சரக கூட்டுறவு தணிக்கையாளர்களுக்கான வருடாந்திர புத்தாக்க பயிற்சி திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது.

    விழுப்புரம் மண்டல கூட்டுறவு தணிக்கை இணை இயக்குனர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டுறவு தணிக்கை துணை இயக்குனர் குணசேகரன், உதவி இயக்குனர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அலுவலக கண்காணிப்பாளர் கதிர்வேல் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர்கள் மயில்முருகன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    பயிற்சி முகாமில் திருவண்ணாமலை மற்றும் அரியலூர் மாவட்ட தணிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள தனியார்" ஓட்டல் கூட்ட அரங்கில், 18 வயதுக்குட்பட்ட பெண் பிள் ளைகள் போதிய விழிப்புணர்வுடன் செயல்படுவது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

    குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் 18 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள், போக்சோ சட்டம், இளைஞர் நீதி சட்டம், பாலியல் துன்புறுத்தல், உள் ளிட்ட பிரச்சினைகளில் போதிய விழிப்புணர்வுடன் செயல்படுவது குறித்து இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர்பேசுகையில், குழந்தைதிருமணம் என்பது பண்டைய காலத்தில் சர்வ சாதாரணமாக இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் அதனால் ஏற்படும் விளைவுகள் பிரச்சினைகள், பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் ஆகிய வைகளை கருத்தில் கொண்டு குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் குழந்தை திருமணங்கள் சில இடங்களில் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் இதில் ஈடுபட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும். அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் பள்ளி, கல் லூரிகளில் மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அவர்களுக்கு தேவையான ஆலோசனை களை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் வேதநாயகம். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலு வலர் வசந்தி ஆனந்தன். மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இளையான்குடி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்க புத்தாக்க பயிற்சி நடந்தது.
    • செஞ்சிலுவை சங்க தலைவர் கலந்துகொண்டு செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் புத்தாக்க பயிற்சி நடந்தது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் பகீரத நாச்சியப்பன் கலந்துகொண்டு செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து பேசினார். பொருளாளர் ராமமூர்த்தி ''மனிதம் செம்மையுற மனவளக்கலை'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். செயலாளர் அனந்த கிருஷ்ணன் ''காலத்தால்' செய்யும் முதலுதவி'' என்ற தலைப்பில் பேசினார். இதில் செஞ்சிலுவைச்சங்க மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். செஞ்சிலுவைச்சங்க திட்ட அலுவலர் நர்கீஸ் பேகம் நன்றி கூறினார்.

    • முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
    • 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    தமிழக அரசு சிறு குறு நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தகம் மூலம் பள்ளி கல்வித்துறை மற்றும் யூனிசெப் இணைந்து ஆசிரியர்களுக்கு பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்டம் அறிவியல் ஆசிரியர்களுக்கு பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி திருப்பத்தூர் விஜய்சாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    அனைவரையும் ஆசிரியர் எம்.சுரேஷ் குமார், வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர். மதன்குமார் தலைமை வகித்து ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் முதல்வர் பாபு மற்றும் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    ஆசிரியர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி சார்ந்த கருத்துக்கள் மாவட்ட தொழில் முனைவோர் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் யுனிசெப் நிறுவனம் சார்பாக சித்தார்த் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கினார்கள்

    பயிற்சியில்100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் எம்.பி. இளவரசி நன்றி கூறினார்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் அகதர மதிப்பீட்டு குழுவின் சார்பில் இளம் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
    • அகதர மதிப்பீட்டுக்குழு விழா அமைப்பு குழுவுடன் இணைந்து சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் அகதர மதிப்பீட்டு குழுவின் சார்பில் இளம் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. விழாவில் அகதர மதிப்பீட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்றார்.

    கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ஆசிரியர்களின் பொறுப்புகள், கடமைகள் பற்றி விளக்கி கூறினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினர்களாக இயற்பியல் துறை தலைவர் பாலு, கணினி அறிவியல் துறை தலைவர் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர். இளம் ஆசிரியர்களும், 5 வருடத்துக்கு குறைவான அனுபவம் உள்ளவர்களும் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    மேலும் அகதர மதிப்பீட்டுக்குழு விழா அமைப்பு குழுவுடன் இணைந்து சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து சரஸ்வதி பூஜையை கொண்டாடினர். அகதர மதிப்பீட்டு குழு மற்றும் விலங்கியல் துறையும் இணைந்து உலக சைவ உணவு நாள் கொண்டாடப்பட்டது.

    இதனை முன்னிட்டு மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டது. 50 சதவீதத்துக்கு மேல் எடுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக முனைவர் லிங்கதுரை பணியாற்றினார். முடிவில் அகதர மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர் சேகர் நன்றி கூறினார்.

    • கொடைக்கானலில் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இதில் பலர் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாணவிகளுக்கு 200 இருக்கைகள் தனியார் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்போடு வழங்கப்பட்டது.

    அதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அன்னை தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தனியார் பள்ளி நிறுவனர் சாம்பாபு தலைமை தாங்கி மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி அளித்தார்.

    கொடைக்கானல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.

    ×