search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி
    X

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.

    உடுமலை மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புத்தாக்க நிகழ்ச்சி நடந்தது.
    • அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    உடுமலை :

    பள்ளி படிப்பு முடித்து கல்லூரியில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புத்தாக்க நிகழ்ச்சி உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி., கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. இதில் தேவதானூர், ஜல்லிபட்டி, இளைய முத்தூர் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளை சேர்ந்த அரசுப்பள்ளிகளில் பயிலும் 130 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். கணினி பயன்பாட்டு துறைத்தலைவர் மணிமேகலை கல்லூரியின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார். தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் செடிபவுன் சரியான கல்லூரியை தேர்ந்தெடுப்பது குறித்தும் கல்லூரிகளில் பாடப் பிரிவினை தேர்ந்தெடுப்பது குறித்தும் பெற்றோரிடம் மனம் விட்டு பேசுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்.

    கல்லூரியில் பயிலும் மாணவிகள் விஷ்ணு பிரியா , மீனாட்சி ,அபிநயா, காளீஸ்வரி ஆகியோர் கல்லூரியில் இருக்கும் வசதிகள் குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும்விடுதிகள் குறித்தும் கல்லூரியின் சிறப்பம்சங்கள் குறித்தும் பேசினர். இயற்பியல் துறை இணை பேராசிரியரும் கல்லூரி மாணவர் சேர்க்கை குழு ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ஆர்.எம்., நன்றி கூறினார். நிறைவாக மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்கள் ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் சேர்க்கை குழு ஒருங்கிணைப்பாளர் எஸ். அறம் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×