search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமை ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
    X

    தலைமை ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள தனியார்" ஓட்டல் கூட்ட அரங்கில், 18 வயதுக்குட்பட்ட பெண் பிள் ளைகள் போதிய விழிப்புணர்வுடன் செயல்படுவது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

    குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் 18 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள், போக்சோ சட்டம், இளைஞர் நீதி சட்டம், பாலியல் துன்புறுத்தல், உள் ளிட்ட பிரச்சினைகளில் போதிய விழிப்புணர்வுடன் செயல்படுவது குறித்து இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர்பேசுகையில், குழந்தைதிருமணம் என்பது பண்டைய காலத்தில் சர்வ சாதாரணமாக இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் அதனால் ஏற்படும் விளைவுகள் பிரச்சினைகள், பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் ஆகிய வைகளை கருத்தில் கொண்டு குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் குழந்தை திருமணங்கள் சில இடங்களில் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் இதில் ஈடுபட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும். அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் பள்ளி, கல் லூரிகளில் மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அவர்களுக்கு தேவையான ஆலோசனை களை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் வேதநாயகம். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலு வலர் வசந்தி ஆனந்தன். மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×