திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் தொடக்க விழா

தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் அந்தோணி சகாய சித்ரா சிறப்புரையாற்றினார்.
செஞ்சிலுவை சங்கம் தொடக்க விழா நடந்தபோது  எடுத்தபடம்.
செஞ்சிலுவை சங்கம் தொடக்க விழா நடந்தபோது  எடுத்தபடம்.
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் இக்கல்வி ஆண்டிற்கான தொடக்க விழா கல்லூரியில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் சு.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் அந்தோணி சகாய சித்ரா சிறப்புரையாற்றினார். முன்னதாக திட்ட அலுவலர் ஆங்கிலத்துறை பேராசிரியர் மோதிலால் தினேஷ் வரவேற்புரையாற்றினார். மாணவர் சாகுவேல் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர் வேலாயுதம், ரமேஷ், டாக்டர் மாலை சூடும் பெருமாள், சிவமுருகன், மருதையாபாண்டியன், ராஜேஷ் பெனட், ராஜ்பினோ, ஸ்ரீதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com