என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா
  X

  ஆதித்தனார் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.
  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறப்பு விருந்தினராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி கலந்து கொண்டார்.
  • விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  திருச்செந்தூர்:

  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் யு.ஜி.சி.யின் வழிகாட்டுதல்படி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அகதர மதிப்பீட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அ.அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார், மூத்த பேராசிரியர் ரா.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

  சிறப்பு விருந்தினராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஆசிரியர்கள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அதன் மூலம் மாணவர்களுக்கு தேவையானவற்றை ஆசிரியர்களால் வழங்க முடியும் என்றார். விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் பென்னட் நன்றி கூறினார்.

  இதேபோன்று, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அணி எண்.48 மாணவர்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கலை நயத்துடன் வாழ்த்து அட்டைகள் செய்திருந்தனர். அவர்கள் கல்லூரியில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களுக்கும் வாழ்த்து அட்டை மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியை கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் கவிதா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


  Next Story
  ×