என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பரங்குன்றம் முருகன் கோவில்.
  X
  திருப்பரங்குன்றம் முருகன் கோவில்.

  சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
  திருப்பரங்குன்றம்


  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4 ஆண்டுகளாக பொறுப்பு அதிகாரிகள் துணை ஆணையராக பதவி வகித்து கோவிலை நிர்வகித்து வந்தனர். 

  சில நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் கோவில்  துணை ஆணையராக சுரேஷ் நியமிக்கப்பட்டார்.  இவர் பொறுப்பேற்றதில் இருந்து கோவிலை தூய்மையாக வைத்திருக்க உத்தரவிட்டார். எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த பொருளையும் கோவில் வளாகத்திற்குள் சேமித்து வைக்க கூடாது எனவும், கோவில் சுவாமி வலம் வரும் வாகனங்களை முறையாக பராமரித்து அதற்குரிய இடங்களில் பாதுகாத்து வைத்திருக்கவும் உத்தரவிட்டார்.

  இதேபோல கோவிலுக்குள் பயன்படுத்தப்படாத இடங்களை சுத்தப்படுத்தி அங்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தகவல் அறியும் அறையும், நூலகமும் அமைக்க உத்தரவிட்டார். 

  மேலும் முதல்வர் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரின்  உத்தர வுக்கிணங்க கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தினமும் நீர்மோர் வழங்கப்படுகிறது. இதேபோல அன்னதானம் நடைபெறும் சஷ்டி மண்டபத்தை தூய்மையாக வைத்திருந்து பக்தர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். 

  வெளி மாவட்டங்கள் தவிர்த்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டவரும் திருப்பரங்குன்றத்திற்கு வருவதையடுத்து அவர்கள் அறியும் வகையில் கோவிலில் உள்ள சுவாமி சிலைகளில் பெயர்பலகை வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் வரலாறுகளையும் கோவில் பற்றிய தகவல்களையும் தெரிந்துகொள்ள  கோவிலுக்குள்ளேயே அறை அமைத்து பக்தர்களுக்கு உதவுவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளார். 

  பக்தர்கள் கிரிவலம் வரும்போது அவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளையும் செய்துதர உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர கோவில் நிர்வாகம் தயாராக இருப்பதாக கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர்.
  Next Story
  ×