என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாரத்தான் போட்டி.
MADURAI NEWS MARATHON COMPETITION
ஒத்தக்கடை போலீஸ் நிலையம் சார்பில் வருகிற 22-ந் தேதி மாரத்தான் போட்டி நடக்கிறது.
மதுரை
மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் உட்கோட்டம், ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் போக்கு வரத்து விழிப்புணர்வு சம்பந்தமாக 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் மாபெரும் மினி மாரத்தான் போட்டி நடக்கிறது.
வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருமோகூர் சாலையில் உள்ள காளிகாப்பான் சந்திப்பில் இந்த போட்டி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள 14 வயதுக்கு மேற்பட்டோர் தங்களது பெயர்களை www.maduraimarathon2022.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து போட்டி நடைபெறும் நாளில் நேரடியாக பங்கேற்கலாம். மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் தலா ரூ. 20 ஆயிரமும், 2-வது பரிசாக தலா ரூ. 10 ஆயிரமும், 3-வது பரிசாக தலா ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
4வது முதல் 13-வது பரிசுகள் (10 பேருக்கு) தலா ரூ.1,000மும், 14-வது முதல் 63-வது பரிசுகள் (50 பேருக்கு) டீ-சர்ட், சேலை மற்றும் பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.
மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களில் லக்கி வின்னர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட தகவலை மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Next Story