என் மலர்
உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.
தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
அவனியாபுரத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அவனியாபுரம்
மதுரை மாநகராட்சி க்குட்பட்ட அவனியாபுரம் பகுதியில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு திடீரென தூய்மை பணியாளர்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்புரவு பணியாளர்களுக்கு சரியான நாட்களில் சம்பளம் வழங்கப்பட வேண்டும், தூய்மை பணிக்கு செல்லும் போது போதிய அளவு தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் இல்லை. அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியில் இருந்து நீக்கப்பட்ட தூய்மைப் பணியாளர் மூர்த்தியை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் 30 பெண்கள் உட்படநூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Next Story