என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.
  X
  3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

  நெல்லை அரசு மருத்துவமனையில் இந்து முன்னணியினர் 3-வது நாளாக போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நர்சு உடலை வாங்க மறுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் இந்துமுன்னணியினர் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  நெல்லை:

  தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் சின்னதம்பி. இந்து முன்னணி நகர துணைத்தலைவர். இவரது மனைவி முருகலட்சுமி. இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

  இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 4-ந் தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர்வீடு திரும்பினார். 8-ந் தேதி மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

  இந்நிலையில் டாக்டர்கள் கவனக்குறைவால் முருகலட்சுமி இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி அவரது உடலை வாங்க மறுத்து நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக அவர்கள்  மருத்துவ கல்லூரி டீன் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அவர்களுடன் டீன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று மாலை அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில் இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னயா தலைமையில் நிர்வாகிகள் குற்றாலிங்கம் மற்றும் உயிரிழந்த முருகலெட்சுமியின் உறவினர்கள் இன்று 3-வது நாளாக அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  

  அவர்கள் முருகலட்சுமி சாவுக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முருகலட்சுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
  Next Story
  ×