என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
டி.பி.சத்திரம் அருகே இளம்பெண் தற்கொலை
டி.பி.சத்திரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை டி.பி.சத்திரம் 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஏஞ்சல் பிரியா(25). இவரது கணவர் அர்ஜுனன். இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
அர்ஜுனன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஏஞ்சல் கோபித்துக்கொண்டு டி.பி.சத்திரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு மின்விசிறியில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து டி.பி.சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story