search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    கால்கள் முறிந்த நிலையில் தேர்வு எழுத வந்த மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்- மு.க.ஸ்டாலின்

    சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த மாணவி சிந்து விபத்தில் கால்கள் முறிந்த நிலையிலும் பிளஸ்2 தேர்வை எழுதி சாதித்துள்ளார்.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த மாணவி சிந்து விபத்தில் கால்கள் முறிந்த நிலையிலும் பிளஸ்2 தேர்வை எழுதி சாதித்துள்ளார்.

    இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

    “வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்”

    கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும்.

    விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

    தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வு களைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.

    மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்... தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

    Next Story
    ×