என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதிச்சான்று குழுவினர் ஆய்வு
Byமாலை மலர்6 May 2022 4:54 AM GMT (Updated: 6 May 2022 4:54 AM GMT)
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு என மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
உடுமலை:
ஆண்டுதோறும் மத்திய மருத்துவக்குழுவினர் தமிழக அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்கின்றனர். அப்போது மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள், சிகிச்சை முறைகள் கண்டறியப்படுகிறது.
குறிப்பாக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு என மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு பிரிவுகளின் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்து 70 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண்கள் பெற்றால், அம்மருத்துவமனைக்கு தேசிய தர உறுதிச்சான்று வழங்கப்படுகிறது.
அவ்வகையில் மத்திய குழுவினர் 7-ந்தேதி வரை உடுமலை அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்துகின்றனர். திருவனந்தபுரம் பொதுமருத்துவமனை இயக்குனர் ஹரிகுமார், விஜயவாடா குடும்ப நலம் கமிஷனர் கமலாக்கர்பட்டு, நெல்லூர் அரசு நர்சிங் கல்லூரி முதல்வர் வசுந்தரா ஆகியோர் அடங்கிய குழுவினர் மேம்பாட்டு பணிகளை பார்வையிடுகின்றனர்.
மருத்துவப்பணிகள் துறையினர் கூறுகையில், தேசிய தர உறுதிச்சான்று பெற்றால் மத்திய அரசின் நிதி கிடைக்கும். அதன் வாயிலாக மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும் என்றனர்.
Next Story
×