என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  X
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  என்எல்சி பணியாளர் விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேட் தேர்வு மதிப்பெண்களின் படி என்.எல்.சி. பணியாளர் தேர்வு என்ற திடீர் அறிவிப்பு அத்தேர்வை எழுதாதவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
  சென்னை: 

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

  கேட் மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்வது கடந்த காலங்களில் பணியாளர்களை தேர்வு செய்யும் முறையில் இருந்து மாறுபட்டுள்ளது.

  கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு என்பது உள்ளூர் விண்ணப்பதாரர்களை பாதிப்படையச் செய்வதோடு அவர்களுக்கான வாய்ப்பை பறிப்பதாக அமையும்.

  கேட் தேர்வு மதிப்பெண்களின் படி தேர்வு என்ற திடீர் அறிவிப்பு அத்தேர்வை எழுதாதவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

  கடந்த காலங்களில் என்.எல்.சிக்கு நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது. எனவே, என்.எல்.சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×