என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஆலங்குளம் அருகே தி.மு.க. தொண்டரணி சார்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவி
Byமாலை மலர்5 May 2022 3:52 PM IST (Updated: 5 May 2022 3:52 PM IST)
ஆலங்குளம் அருகே தி.மு.க. தொண்டரணி சார்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
ஆலங்குளம்:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. தொண்டரணி சார்பில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 69-வது பிறந்த தின பொதுக்கூட்டம் மற்றும் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கழுநீர்குளத்தில் நடைபெற்றது.
கழுநீர்குளம் ஊராட்சி மன்றத் தலைவரும், மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான கை.முருகன் வரவேற்றார். பொன்மோகன்ராஜ், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டி, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் வேல் ஆகியோர் தொகுப்புரை ஆற்றினர். மாநில பேச்சாளர்கள் ஆரணி மாலா, உடன்குடி தனபால் ஆகியோர் பேசினர்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்று, கல்லூத்து, அத்தியூத்து, முத்துகிருஷ்ணபேரி அங்கன்வாடிகளுக்கு இருக்கைகள், கலிங்கப்பட்டி ரேசன் கடைக்கு மேஜை, தென்னங்கன்றுகள் மற்றும்1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், யூனியன் சேர்மன்கள் கீழப்பாவூர் காவேரி சீனித்துரை, ஆலங்குளம் திவ்யா மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, தொழிலதிபர்கள் சண்முகவேலு, மணிகண்டன், ஏ.பி.அருள், கீழப்பாவூர் பேரூர் பொருளாளர் பொன்செல்வன், மாவட்ட இளைஞரணி சரவணன், ஒன்றிய அவைத்தலைவர் தளபதி முருகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கை. முருகன்செய்திருந்தார்.
Next Story
×