search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்கள்
    X
    ரெயில்கள்

    ரெயில்கள் நிற்காததால் பயணிகள் ஏமாற்றம்

    ராமநாதபுரத்தில் ரெயில்கள் நிற்காததால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
    ராமநாதபுரம்

    ராமேசுவரத்தில் இருந்து அஜ்மீர், அயோத்தி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ராமநாதபுரம் ரெயில்நிலையத்தில் நிற்காததால் பயணிகளும், பக்தர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் முதல் மதுரை வரையிலான ரெயில்பாதை அகல ரெயில் பாதையாக உள்ளது. இந்த பணிகள் தொடங்கும் முன்னர் அகல  ரெயில்பாதை அமைக்கப்பட்டால் வடமாநிலங்களை இணைக்கும் வகையில் பல ரெயில்கள் விடப்படும் என்றும், புண்ணிய தலமான ராமேசுவரம் மட்டுமின்றி தொழில் துறையில் பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் முன்னேறிவிடும் என்றும் கூறப்பட்டது. 

    இதனால் மகிழ்ந்திருந்த பயணிகளுக்கு இன்றுவரை ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. வடமாநிலங்களை இணைக்கும் வகையில் சில ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு உள்ளதோடு சென்னைக்கு கூடுதல் ரெயில்களோ, பகல் நேர ரெயில்களோ விடப்படவில்லை. 

    குறிப்பாக வட மாநிலங்களை இணைக்கும் வகையில் ராமேசுவரம்- அஜ்மீர் ரெயில், ராமேசு வரம்-அயோத்தி ரெயில்கள் விடப்பட்டன. இந்த ரெயில்கள் விடப்பட்ட போதிலும் இதனால் ராமநாதபுரம் பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஏனெனில் இந்த ரெயில்கள் ராமேசு வரத்தில் கிளம்பி மானா மதுரையில்தான் அடுத்த நிறுத்தம் என வரை யறுக்கப்பட்டு உள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் மேற்கண்ட ரெயில்களில் பயணிகள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 

    இந்த ரெயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் ராமேசுவரம் அல்லது மானாமதுரைக்குதான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. 

    ராமநாதபுரம் மாவட்டத்தி ற்காக விடப்பட்ட ரெயில் மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் நிற்காதது வேதனை அளிப்பதாக உள்ளது. தேவிபட்டினம், ஏர்வாடி, சேதுக்கரை, திருப்புல்லாணி, திருஉத்தர கோசமங்கை, ஓரியூர் போன்ற புண்ணியதலங்களை சுற்றி உள்ள மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் இந்த ரெயில்கள் நின்று செல்லாதது பயணிக ளையும், குறிப்பாக பக்தர்களையும் கவலை அடைய செய்துள்ளது. 

    உடனடியாக மேற்கண்ட ரெயில்களை ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ரெயிகள் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றால்தான் புண்ணியதலங்களை கொண்ட ராமநாதபுரம் மாவட்ட பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் பயன் உள்ளதாக அமையும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×