search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்வு எழுதும் மாணவிகள்.
    X
    தேர்வு எழுதும் மாணவிகள்.

    பிளஸ்-2 தேர்வு - திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர்

    தேர்வு எழுத சென்ற மாணவர்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி அனுப்பினர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.  வருகிற 28-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது. பிளஸ்-2 தேர்வை 218 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 717 மாணவ-மாணவிகள், தனித் தேர்வர்கள் 167 பேர், மாணவ- மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 884 பேர் 91 தேர்வு மையங்களில்  எழுதினர்.

    தேர்வு மையங்களுக்கு இன்று காலையே மாணவர்கள் வந்தனர். அவர்கள் வளாகங்களில் அமர்ந்து படித்தனர். முன்னதாக தேர்வு எழுத சென்ற மாணவர்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி அனுப்பினர். தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.  

    மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக தலைமை ஆசிரியர்களும், 91 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 1,608 ஆசிரி யர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.  

    தேர்வுகளில் காப்பியடித்தல், ஒழுங்கீன செயல்கள், முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிப்பதற்கு கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும், தனித்தனியாக பறக்கும் படை அமைப்பட்டது.

    மேல்நிலை பொதுத்தேர்வுக்கு முதன்மை கல்வி அதிகாரி மூலமாக 157 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டது. பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் தேர்வு நடைபெறும் இடங்களுக்கு சென்று அதிரடி ஆய்வில்  ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு தேர்வு மையத்திலும் புகார் மற்றும் ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையங்களில் மன அமைதியுடன்  தைரியத்துடன், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

    கலெக்டர் வினீத் தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். அவருடன் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் மற்றும் கல்வி அதிகாரிகள் உடன் சென்றனர்.   
    Next Story
    ×