search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காங்கேயத்தில் தமிழர் பாரம்பரிய கலை மன்ற ஆலோசனை கூட்டம்

    மறைந்து வரும் தமிழரின் பாரம்பரிய உணவு, உடை, கலை கலச்சாரம் ஆகியவற்றுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.
    காங்கேயம்:

    காங்கேயம் அகிலாண்டபுரத்தில் உள்ள ஸ்ரீசீனிவாசா திருமண அரங்கில் தமிழர் பாரம்பரிய கலை மன்றம் துவக்கப்பட்டது. அதை தொடர்ந்து மன்றத்தின் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

    அதில் மறைந்து வரும் தமிழரின் பாரம்பரிய உணவு, உடை, கலை கலச்சாரம் ஆகியவற்றுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அதில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது எனவும் அவற்றை வருங்கால சந்ததினருகுக்கு கொண்டு செல்வது என்றும் உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.  

    மேலும் கூட்டத்தில் எதிர்கால திட்டங்கள் பற்றியும் புதிய உறுப்பினர் சேர்க்கை பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முடிவில் மன்றத்தின் துவக்க விழாவை விரைவில் துவக்குவது என தீர்மானிக்கப்பட்டது.  
    Next Story
    ×