என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முதல்வர் ஸ்டாலின்
  X
  முதல்வர் ஸ்டாலின்

  வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்- நிதியுதவி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஆலம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக சிவகாசி வட்டம், கத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருபத்தைந்தே வயதான சோலை விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.  உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் மூன்று லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

  இவ்வாறு முதலமைச்சர் கூறி உள்ளார்.
  Next Story
  ×