search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுரோட்டில் படுத்து மறியலில் ஈடுபட்ட மூதாட்டி.
    X
    நடுரோட்டில் படுத்து மறியலில் ஈடுபட்ட மூதாட்டி.

    திருப்பூர் ஆலங்காடு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் - பரபரப்பு

    மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட  ஆலங்காடு  பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்தும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள காலி செய்யக் கோரி திருப்பூர் மாநகராட்சி சார்பில் அந்த பகுதி மக்களிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. பல முறை நோட்டீஸ் வழங்கியும்  அவர்கள் அந்த இடத்தை காலி செய்யவில்லை. 

    இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியோர் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

     அப்போது நாளை முதல் பொதுத்தேர்வு தொடங்குவதால் பொதுத் தேர்வு முடியும் வரை அகற்றும் பணி நடைபெறாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ஆனால் பொதுமக்கள் கட்டாயம் 3 மாதம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு அறிவிப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×