search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public road blockade"

    • பொதுமக்கள் சுமார் 100 பேர் திடீரென விழுப்புரம் சாலையின் குறுக்கே ஆம்புலன்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி

    விபத்தில் இறந்து போன சிறுவனுக்கு நியாயம் கேட்டு சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100 பேர் திடீரென விழுப்புரம் சாலையின் குறுக்கே ஆம்புலன்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டு வரும் சிறுவனின் உறவினர்கள் இந்த சாலை மிகவும் குறுகியதாக உள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதாகவும், பள்ளிகள் அதிகளவில் உள்ளதாகவும், சாலையை ஆக்கிரமைத்து கடைகள் உள்ளதால் விபத்துகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது என குற்றம்சாட்டினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளிலும் மின்சாரம், குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #GajaCyclone
    பொன்னமராவதி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திலும், திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளிலும் மின்சாரம், குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நவலூரணிப்பட்டி பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கஜா புயல் பாதிப்பால் அப்பகுதிக்கு இன்னும் குடிநீர், மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை தொட்டியப்பட்டியில் மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.



    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பகுதி பொதுமக்களும் குடிநீர் -மின்சாரம் விநியோகிக்க கோரி இன்று காலை கொட்டும் மழையிலும் காலிகுடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    திண்டுக்கல்லில் நள்ளிரவு வரை காத்திருந்தும் குடிநீர் வராததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் 41-வது வார்டுக்குட்பட்ட பூச்சிநாயக்கன்பட்டி, முத்தாலம்மன் கோவில் தெரு, ஜின்னாநகர், மறைஞானநகர், யூசூப்பியா நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 25 நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் இருந்து வந்தனர்.

    மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர். மாநகராட்சி ஊழியர் நேற்று அப்பகுதிக்கு வந்து இன்று இரவு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறிச் சென்றார்.

    அதனை நம்பி இரவு 1 மணி வரை அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கண் விழித்து காத்திருந்தனர். ஆனால் தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்து திண்டுக்கல் - மதுரை சாலையில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகர் தெற்கு போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்தனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து இன்று மாலைக்குள் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. #tamilnews
    ×