search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் அரிசி
    X
    ரேசன் அரிசி

    ரெயிலில் கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்

    கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி விசாரித்து வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து உள்ளது. தொடர்ந்து கார், லாரியில் கடத்தப்படும் ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகிறார்கள்.

    எனினும் ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தல் குறையவில்லை. இதற்கிடையே கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில்ரேசன் அரிசி மூட்டைகள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரெயிலில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா தலைமையில் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலைய நடைமேடையில் கேட்பாரற்று மூட்டை மூட்டையாக ரேசன் அரசி கிடந்தது. மொத்தம் ஒரு டன் ரேசன் அரிசி இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதை அறிந்ததும் ரேசன் அரிசி கடத்தல் கும்பல் பிளாட்பாரத்திலேயே ரேஷன் அரிசி மூட்டைகளை போட்டுவிட்டு தப்பி இருப்பது தெரிந்தது. ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×