என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பல்லடம் மங்கலம் ரோட்டில் இருந்த மின்கம்பத்தில் தீப்பொறி பறந்த போது எடுத்த படம்.
  X
  பல்லடம் மங்கலம் ரோட்டில் இருந்த மின்கம்பத்தில் தீப்பொறி பறந்த போது எடுத்த படம்.

  பல்லடத்தில் சூறாவளி காற்றுடன் மழை மின்தடையால் பொதுமக்கள் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை உடனடியாக தடை செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
  பல்லடம்:

  பல்லடத்தில் நேற்று வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இந்த நிலையில் இரவு 7 மணியளவில் திடீரென இடி,மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யத்தொடங்கியது. 

  அப்போது மங்கலம் ரோடு ஆனந்த விநாயகர் கோவில் அருகே உள்ள மின்கம்பத்தில் கம்பிகள் ஒன்றுடன் உரசி தீப்பொறி பறந்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பல்லடம் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். 

  சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை உடனடியாக தடை செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், பல்லடம் மங்கலம் ரோடு, பச்சாபாளையம், காமராஜர் நகர், உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. 

  இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
  Next Story
  ×