என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் பார்வையிட்ட காட்சி.
  X
  பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் பார்வையிட்ட காட்சி.

  சேலம் வழியாக சென்ற ரெயிலில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சேலம் ஜங்‌ஷன் வழியாக கேரளாவுக்கு செல்லும் விரைவு ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  சேலம்:

  ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சேலம் ஜங்‌ஷன் வழியாக கேரளாவுக்கு செல்லும் விரைவு ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து இன்று அதிகாலை அந்த ரெயிலில் போலீஸ் ஏட்டு ராமன் தலைமையில் போலீசார் சக்திவேல், கண்ணன் சதீஷ் குமார் ஆகியோர் சோதனை நடத்தினர். அப்போது டி.3 பெட்டியில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இருந்த 13.5 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார். இந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×