
நெல்லை மாநகர பகுதியைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு ஒருவர் நேற்று குறுக்குத்துறை பகுதிக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளார்.
அப்போது அவர் கையில் வைத்திருந்த வாக்கி டாக்கியை தவறவிட்டு விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏட்டு அங்கும் இங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
இதனிடையே காவல் நிலையத்துக்கு வந்த ஏட்டு வாக்கி டாக்கி தொலைந்ததை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மற்றொரு வாக்கி டாக்கியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
அவரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்புகொண்டபோது அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் வாக்கி டாக்கி தொலைந்தது தெரியவந்தது.
இந்நிலையில் சாலையில் கிடந்த வாக்கி டாக்கியை எடுத்த வாகன ஓட்டி ஒருவர் போக்குவரத்து காவலரிடம் கொடுத்துள்ளார். அவர் உடனடியாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து ஒப்படைத்துள்ளார்.