search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேள்வி பூஜையை தமிழிசை தொடங்கி வைத்தார்
    X
    வேள்வி பூஜையை தமிழிசை தொடங்கி வைத்தார்

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமி வேள்வி பூஜை- தமிழிசை தொடங்கி வைத்தார்

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    சித்ரா பவுர்ணமியையொட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

    சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு பாதபூஜை செய்து செவ்வாடை பக்தர்கள் வரவேற்றனர். பிற்பகலில் ஆன்மீக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் வேள்வி சாலையில் கோ பூஜை செய்தார். இதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி கருவறை முன்பாக நவதானியத்தால் அலங்கரிக்கப்பட்ட வட்டம், எண்கோணம். டைமண்ட் வடிவத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த பிரதான வேள்வி குண்டத்தில் பங்காரு அடிகளார் தீபாராதனை காட்டினார்.

    இதனைத் தொடர்ந்து சித்தர் பீடம் வந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.

    கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து மக்கள் முழுமையாக மீண்டு சுபிட்சம் பெறவும். உலகப் பொருளாதாரம் மேம்படவும் அன்னை ஆதிபராசக்தியை வணங்கி வேள்வி நடத்தப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், ஓய்வுபெற்ற நீதிபதிகள் முருகேசன், ராஜேஷ்வரன், முன்னாள் தேர்வாணைய குழு தலைவர் அருள்மொழி மற்றும் ஏராளமான செவ்வாடை பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×