search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை வால்டாக்ஸ் சாலையில் யானைக்கவுனி மேம்பாலப்பணிகள் தீவிரமாக நடந்து வருவதை படத்தில் காணலாம்
    X
    சென்னை வால்டாக்ஸ் சாலையில் யானைக்கவுனி மேம்பாலப்பணிகள் தீவிரமாக நடந்து வருவதை படத்தில் காணலாம்

    சென்னை வால்டாக்ஸ் சாலையில் யானைக்கவுனி மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்- விரைவில் திறக்க ஏற்பாடு

    கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த பாலத்தின் கீழ் ரெயில்கள் இயக்கப்படாத போது பழைய மேம்பாலம் இடித்து அகற்றும் பணி நடந்தது.

    சென்னை:

    சென்னை யானைக்கவுனியில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    சென்னை வால்டாக்ஸ்ரோடு சூளை பகுதியை இணைக்கும் வகையிலான 100 ஆண்டு பழமைவாய்ந்த யானைக்கவுனி 50 மீட்டர் நீள மேம்பாலம் பழுதடைந்ததால் கடந்த பல ஆண்டுகளாக மூடப்பட்டது.

    தற்போது அந்த இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும் வகையில் அந்த பழைய பாலம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த பாலத்தின் கீழ் ரெயில்கள் இயக்கப்படாத போது பழைய மேம்பாலம் இடித்து அகற்றும் பணி நடந்தது.

    இதை தொடர்ந்து அங்கு புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியது. மேம்பாலம் அமைப்பதற்காக ரெயில்வே தண்டவாளங்களுக்கு அருகே பிரம்மாண்ட ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் தீவிரமாக நடந்து வருகின்றன.

    தற்போது பேசின்பிரிட்ஜ், சென்ட்ரலில் ஏற்பட்டு வரும் வாகன நெரிசலுக்கு இந்த பாலம் திறக்கப்படும் போது தீர்வு ஏற்படும். அங்கு போக்குவரத்து நெரிசல் குறையும்.வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

    இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான யானைகவுனி ரெயில்வே பாலம் வால்டாக்ஸ் சாலை மற்றும் சூளை ராஜா முத்தையா சாலைகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

    இந்தப் பாலத்தின் இருபுறமும் உள்ள அணுகுசாலை பகுதி மட்டும் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. இந்தப் பாலம் மிகவும் பழுடைந்த காரணத்தால் கன ரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு கடந்த 2016-ம் ஆண்டு மூடப்பட்டது.

    யானைக்கவுனி மேம்பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட ரெயில்வே துறை, மாநகராட்சி இணைந்து பணிகளை மேற்கொண்டது.கொரோனா ஊரடங்கின் போது யானைக்கவுனி மேம்பாலம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது.

    தற்போது புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.புதிய மேம்பாலம் 150 மீட்டர் நீளத்துக்கு கட்டப்படுகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் கூடுதல் ரெயில் தடம் பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் ரெயில் தடம் பாதை கிடைக்காமல் காத்திருக்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சீராக இயங்க வாய்ப்பு ஏற்படும்.இப்பாலம் இன்னும் 6 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×