search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போட்டியை இந்திய இளையோர் பாரம்பரிய சிலம்பம் சங்க மாநில தலைவர் தர்மசாஸ்தா தொடங்கி வைத்தார்.
    X
    போட்டியை இந்திய இளையோர் பாரம்பரிய சிலம்பம் சங்க மாநில தலைவர் தர்மசாஸ்தா தொடங்கி வைத்தார்.

    மாநில அளவிலான சிலம்பம் போட்டி

    இந்திய இளையோர் பாரம்பரிய சிலம்பம் சங்கம் நடத்தும் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு தம்புராட்டி அம்மன் கோவில் முன்புள்ள மைதானத்தில் நடந்தது.
    செய்துங்கநல்லூர்:

    இந்திய இளையோர் பாரம்பரிய சிலம்பம் சங்கம் நடத்தும் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு தம்புராட்டி அம்மன் கோவில் முன்புள்ள மைதானத்தில் நடந்தது. போட்டியை இந்திய இளையோர் பாரம்பரிய சிலம்பம் சங்க மாநில தலைவர் தர்மசாஸ்தா தொடங்கி வைத்தார்.

    இதற்காக வல்லநாடு மெயின்ரோட்டில் இருந்து மாணவ--மாணவிகள் சிலம்பம் உள்பட தற்காப்பு கலைகளை விளையாடியபடி ஊர்வலமாக மைதானத்திற்கு வந்தனர்.
    மாநில செயலாளர் வேல்முருகன், மாநில பொருளாளர் விஷ்ணுவர்தன், மாநில வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன், மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், மாநில துணைச் செயலாளர் ஹரிஹரன், சிலம்பாட்ட தொடக்க விழாவில் பேசினர்.

    கண்ணன், சுந்தரவடிவேலு, மணிகண்டன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களை சேர்ந்த யூ.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    Next Story
    ×