
தி.நகர் சிவசைலம் தெருவில் பிமல் (47) என்பவர் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு வேலை பார்க்கும் முகம்மது காசிம் (47), மகேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து உதிரிபாகங்கள் விற்பனை செய்ததில் ரூ.10 லட்சம் வரை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி பிமல் பாண்டிபஜார் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.