search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரம் துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள்.
    X
    ராமேசுவரம் துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள்.

    மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

    ராமேசுவரத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.
    ராமேசுவரம்

    தமிழக கடலோர  பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மீன் இனப்பெருக்கத்திற்காகவும் தமிழக அரசு ஆண்டுதோறும் ஏப்ரல் 15ந்தேதி முதல் ஜூன் 14ந்தேதி இரவு வரை 61நாட்கள் மீன்பிடிப்பதற்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கும். 

    இந்த 61 நாட்களில் மீனவர்கள் ராமேசுவரம் உட்பட தமிழகபகுதி முழுவதும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மாட்டார்கள்.  இவர்கள் படகுகளை கடலில் பாதுகாப்பாக நிறுத்தி விடுவார்கள்.

    மேலும் 61 நாட்களில் படகுகளில் பழுது நீக்கம் ªச்யவது, பராமரிப்பது   போன்ற பணிகளையும் மீனவர்கள் செய்து வருவார்கள்.  ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய கடலோர  பகுதிகளில் இன்று முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது.

    இதையடுத்து இந்தபகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. படகுகளை கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி சாதனங்களையும் வீடு களுக்கு   எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டனர். சில மீனவர்கள் படகுகளை சீரமைக்கும் பணிக்காக கடலோர பகுதிகளில் படகு களை ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இன்று  தடைக்காலம் தொடங்கியதை அடுத்து ராமேசுவரம் கடலோரபகுதியில் மீனவர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
    Next Story
    ×