search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேரோடும் வீதியில் ஆய்வு செய்த அசோக்குமார் எம்.எல்.ஏ.
    X
    தேரோடும் வீதியில் ஆய்வு செய்த அசோக்குமார் எம்.எல்.ஏ.

    தேரோடும் பாதை சீரமைப்பு

    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோடும் பாதை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    இந்நிலையில், இன்று 9 ஆம் நாள் மண்டகப்படியாக தேரோட்டம் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. பேராவூரணி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தேரடியில் 

    இருந்து, தேர் சுற்றி வரும் பாதை முழுவதும், தண்ணீர் தேங்கி நின்று சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

    இதையடுத்து நேற்று வியாழக்கிழமை காலை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக் குமார் தேர் ஓடும் பாதையில் ஆய்வு செய்தார். அப்போது, பாதையில் உள்ள சேர் மண்ணை உடனடியாக 

    அகற்றவும், புதிய பாதையை உடனடியாக அமைக்கவும், நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி அலுவலர்-களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இதையடுத்து, அப்பகு-தியில் தேங்கியிருந்த மழைத் தண்ணீரை பேரூராட்சி பணியாளர்கள், இயந்திரம் மூலம் வெளியேற்றி காய வைக்கும் பணியில் ஈடுபட்-டனர். மேலும், அப்பகுதியில் தேரோடும் பாதை 

    முழுவதும், புதிய கிரஷர் மணல் கொட்டி பாதையை சமப்ப-டுத்தும் பணி நடைபெற்றது. ஆய்வின்போது, பேரூராட்சி பெருந்தலைவர் சாந்திசேகர், நீலகண்டப் பிள்ளையார் கோயில் பரம்பரை 

    அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் சங்கரன், மற்றும் நடராஜன் சங்கரன், பேரூராட்சி வார்டு உறுப்பினர் மு.த.முகிலன், திருக்கோயில் பணியாளர்கள் கணபதி, துரை, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் 

    அன்பரசன், துப்புரவு மேற்-பார்வை--யாளர் வீரமணி மற்றும் பேரூராட்சி பணி-யாளர்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×