search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜுவிடம் மனு கொடுத்த செந்தமிழ் நகர் பகுதி பொதுமக்கள்.
    X
    மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜுவிடம் மனு கொடுத்த செந்தமிழ் நகர் பகுதி பொதுமக்கள்.

    தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பஸ்களை பாளை பஸ் நிலையம் வழியாக இயக்கக்கோரி மனு

    தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பஸ்களை பாளை பஸ் நிலையம் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேயரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார்.

    துணை மேயர் கே.ஆர்.ராஜு, மாநகராட்சி உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை மாநகராட்சி 18-வது வார்டு செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மேயர், துணை மேயரிடம் ஒரு மனு அளித்தனர்.

    அதில், எங்கள் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை விரைவாக முடித்து குடிநீர் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    தே.மு.தி.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், பாளை பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்-கப்பட்டு தற்போது பஸ் நிறுத்தம் ஆக மாறிவிட்டது.

    எனினும் அந்த பஸ் நிலை-யத்தின் உள்ளே மாநகரத்தில் உள்ள பஸ்கள் மட்டுமே சென்று வருகிறது.தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அந்த பஸ் நிலையத்தை புறக்கணித்து செல்கிறது.

    எனவே பஸ் நிலையம் வழியாக அந்த பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், முதியவர்கள் பயனடைவார்கள்.

    மேலும் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்று சாலை அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
    Next Story
    ×