search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தாத 49 லட்சம் பேர்

    கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதமாக கருதப்படுவதால் அதனை கட்டாயம் போட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து விட்டதால் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டன.

    ஆனாலும் பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்றவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது.

    கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதமாக கருதப்படுவதால் அதனை கட்டாயம் போட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

    இதுவரையில 10 கோடியே 52 லட்சத்து 54 ஆயிரத்து 742 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டோர் 21 லட்சத்து 21 ஆயிரம் பேர் உள்ள நிலையில் இதுவரை 14 லட்சத்து 25 ஆயிரத்து 890 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இது 67.23 சதவீதமாகும்.

    15 முதல் 18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 33 லட்சத்து 46 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் முதல் தவணை 28 லட்சத்து 87 ஆயிரத்து 621 பேருக்கும் 2-வது தவணை 21 லட்சத்து 27 ஆயிரத்து 219-பேருக்கும் போடப்பட்டுள்ளது. மொத்தம் 50 லட்சத்து 14 ஆயிரத்து 840 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் தடுப்பூசி செலுத்த தகுதி உள்ளவர்கள். இதில் முதல் தவணை 5 கோடியே 34 லட்சத்து 46 ஆயிரத்து 250 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 3 கோடியே 45 லட்சத்து 47 ஆயிரத்து 226 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 9 கோடியே 79 லட்சத்து 93 ஆயிரத்து 478 தடுப்பூசிகள் இப்பிரிவினருக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    45 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் 6 கோடியே 12 லட்சத்து 37 ஆயிரம் பேர் தடுப்பூசி போட தகுதி உடையவராக கண்டறியப்பட்டது. இதில் முதல் தவணை 5 கோடியே 63 லட்சத்து 33 ஆயிரத்து 871 பேருக்கும் 2-வது தவணை 4 கோடியே 66 லட்சத்து 74 ஆயிரத்து 445 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 10 கோடியே 30 லட்சத்து 8,316 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    60 வயதுக்கு மேற்பட்டோர் ஒரு கோடியே 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் உள்ள நிலையில் அதில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 742 பேர் மட்டுமே இதுவரையில் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், தனியார் மருத்துவமனைகள் படுத்துமான மொத்தம் இதுவரையில் 10 கோடியே 52 லட்சத்து 54 ஆயிரம் தடுப்பூசிகள் மொத்தம் செலுத்தப்பட்டுள்ளது.

    நேற்று வரை முதல் தவணை தடுப்பூசி மட்டும் 49 லட்சத்து 3,125 பேர் போடாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. 2-வது தவணை தடுப்பூசி ஒரு கோடியே 37 லட்சத்து 61 ஆயிரத்து 938 பேருக்கு செலுத்த வேண்டும்.

    தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை இவ்வாறு இருந்து வரும் நிலையில் ஒரு கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 476 தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக சுகாதாரத்துறை புள்ளி விவரம் கூறுகிறது. இவ்வளவு தடுப்பூசி இருந்தும் அதனை பயன்படுத்தாமல் இருப்பதால் சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

    27 மெகா தடுப்பூசி மையங்கள் மூலம் 4 கோடியே 34 ஆயிரத்து 268 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள்... கீவ் நகரை மிக எளிதில் கைப்பற்றிவிடலாம் என்று புதின் தவறாக நினைத்துவிட்டார்- பென்டகன் தலைவர்

    Next Story
    ×