என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முருகையா.
  X
  முருகையா.

  மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மனு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மனு அளித்தார்.
  தென்காசி:

  தென்காசி மாவட்டம், சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி  கொட்டாகுளம் இந்திரா நகரை சேர்ந் தவர் முருகையா இவரது மகள் சுப்பு லட்சுமி (வயது 37). மாற்றுத்திறனாளி மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவர்.

  அவரை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று முருகையா சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் சுப்பு லட்சுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

  இந்நிலையில் முருகையா தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது மகளை இதற்கு மேலும் தன்னால் பணம் செலவழித்து சிகிச்சை அளிக்க வசதி இல்லை. எனவே கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங் கினார்.

   அதற்கான மனுவை  வழங்கி செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதின் பெயரில் மனுவை பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதையும் வழங்கி உள்ளனர்.
  Next Story
  ×