search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா போலீசாருக்கு வழங்கிய காட்சி.
    X
    விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா போலீசாருக்கு வழங்கிய காட்சி.

    நெல்லை மாவட்ட காவல்துறையினருக்கு பாலின உணர்திறன் பயிற்சி வகுப்பு

    நெல்லை மாவட்ட காவல் துறையினருக்கு பாலின உணர்திறன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    நெல்லை:

     காவல்துறையினருக்கு பாலின உணர்திறன் குறித்து பயிற்சி வழங்குமாறு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி நெல்லை மாவட்ட காவல் துறையினருக்கு பாலின உணர்திறன் பயிற்சி வகுப்பு  மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண் காணிப்பாளர்  மாரிராஜன்   தலைமையில் கிருஷ்ணா புத்தில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட காவல் அதிகாரிகள்  உள்ளிட்ட 64 பேர் கலந்து கொண்டனர்.பயிற்சி வகுப்பில் சிறப்பு விருந்தினராக நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா கலந்து கொண்டு பாலின உணர்திறன் குறித்தும் மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் குறித்து சிறப்புரையாற்றினார்.

    பயிற்சியில் காவலர்களுக்கு பாலின உணர்திறன் குறித்தும், ஆரோக்கிய உணவு குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

    மேலும் குழந்தைகள் நல அலுவலர் களால் காவல்துறை யினருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், 1098 மற்றும் 181 இலவச எண்கள் குறித்தும், குழந்தைத் திருமணம் குறித்தும் காவலர்கள் எவ்வாறு அவர்களிடம் அணுக வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு சிறப்பு பிரிவு  இன்ஸ்பெக்டர் மீராள்பானு, சப்&இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்   கலந்து கொண்டனர்.
    Next Story
    ×