search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு வெள்ளரிக்காய் வரத்து அதிகரிப்பு

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு வெள்ளரிக்காய் வரத்து அதிகரித்துள்ளது.
    அன்னதானப்பட்டி:
     
    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் சமயத்தில்  பொதுவாக மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் காய்களில் ஒன்றாக வெள்ளரி உள்ளது. 

    உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் பல்வேறு வகையான  மருத்துவ குணங்கள் கொண்டதாக வெள்ளரிக்காய் உள்ளது. 

    தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கும் முன்னரே சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. 
    இதையடுத்து சேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் இருந்தும் சேலம் மார்க்கெட்டுக்கு வெள்ளரி வரத்து தொடங்கியுள்ளது.  

    ஆற்றோரம் தெரு காய் மார்க்கெட், செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட், ஆனந்தா காய் மார்க்கெட்,  கடைவீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளரிக்காய் சாலையோரங்களில் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

      1 கிலோ ரூ.40- க்கு வெள்ளரிக்காய்கள் விற்பனையாகிறது.

    வெள்ளரிக்காய் நீர்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காயாகும். பசியை தூண்டும். உடலுக்கு குளிர்ச்சி தரும். இதிலுள்ள தாது உப்புக்கள் உடல் செரிமானத்திற்கு உதவி புரியும். வெள்ளரி சாப்பிட்டு வந்தால் மூளை  சுறுசுறுப்பாக இயங்கும். 

    மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.  இவ்வளவு நன்மைகள் நிறைந்த மிக எளிமையான காய் என்பதால் பொதுமக்கள், பெண்கள் ஆர்வத்துடன் அதனை வாங்கிச் செல்கின்றனர். 

    Next Story
    ×