என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொள்ளை
  X
  கொள்ளை

  துடியலூர் அருகே வீட்டுக்குள் புகுந்து 15 பவுன் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மாவட்டம் துடியலூர் அருகே வீட்டுக்குள் புகுந்து 15 பவுன் நகை மற்றும் அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கவுண்டம்பாளையம்,

  துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன் பாளையம் மணி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 43). இவர் ஒயர் கட்டில் செய்து கொடுக்கும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.

  முத்துக்குமரனின் சொந்த ஊர் தஞ்சாவூர். அங்கு நடந்த கோவில் விழாவுக்காக கடந்த 18-ந்தேதி முத்துக்குமரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தஞ்சாவூர் சென்றார். பின்னர் கோவில் திருவிழா முடிந்து இன்று அதிகாலை அவர் கதிர்நாயக்கன்பாளையம் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். பீரோவில் இருந்த வளையல், கம்மல், சங்கிலி உள்ளிட்ட 15 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருந்தது. மேலும் சில அமெரிக்க டாலர்களும் வீட்டில் வைத்திருந்தார். அந்த டாலர்களும் திருடு போய் இருந்தது. லேப்-டாப்பையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றிருந்தனர்.

  முத்துக்குமரன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுபற்றி துடியலூர் போலீசில் முத்துக்குமரன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

  அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். முத்துக்குமரன் வீட்டில் கொள்ளையடித்த நபர்களின் உருவங்கள் கேமிராவில் பதிவாகி உள்ளதா? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
  Next Story
  ×