search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழகம்
    X
    அண்ணா பல்கலைக்கழகம்

    விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறுத்தி வைப்பு- 10 ஆயிரம் என்ஜினீயரிங் மாணவர்கள் பெயிலாகும் அபாயம்

    பிப்ரவரி 1 முதல் 12-ந்தேதி வரை ஆன்லைன் தேர்வில் பங்கேற்று விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாதவர்கள் ஆப்சென்ட் ஆக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்துவதில் கொரோனா காரணமாக தடங்கள் ஏற்பட்டுள்ளது.

    வழக்கமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி மாதம் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டது. இதன்படி கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டது. கூகுள் கிளாஸ் ரூப் ஆப் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.

    காலை 9 மணிக்கு கல்லூரி வினாத்தாளை வெளியிட்டது. அதை பார்த்து மாணவர்கள் வீட்டில் இருந்த படியே தேர்வு எழுதினார்கள்.

    தேர்வு எழுதிய விடைத்தாள்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து தேர்வு நேரம் முடிந்த 30 நிமிடங்களுக்குள் பதிவேற்றம் செய்து அனுப்ப வேண்டும். பின்னர் அந்த வினாத்தாள்களை அதே நாள் மாலை 5 மணிக்குள் தூதஞ்சல் மூலம் கொரியர் அனுப்ப வேண்டும்.

    அந்த விடைத்தாள்களை கல்லூரிகள் சேகரித்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தன. அந்த வினாத்தாள்கள் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டன.

    இதில் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அந்த விடைத்தாள்களை திருத்தும் பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.

    அந்த மாணவர்களை ஆப்சென்டாக கணக்கிட்டுள்ளனர். எனவே அவர்கள் அனைவரும் தேர்தலில் தோல்வி அடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பிப்ரவரி 1 முதல் 12-ந்தேதி வரை ஆன்லைன் தேர்வில் பங்கேற்று விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாதவர்கள் ஆப்சென்ட் ஆக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

    Next Story
    ×