search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் தேர்வு"

    • மாநில அளவில் வெற்றி பெறுவோர் ஆண்டுதோறும் வெளிநாடு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
    • வினாத்தாள் தயாரித்தல், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடவாரியாக தேர்வு நடத்தி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திலும் 'அப்ஜெக்டிவ்' வகை கேள்விகள் தயாரித்து எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

    தேர்வு முடிந்ததும் தவறான கேள்விகளுக்கான விடை உடனே திரையில் தோன்றும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அவர்களுக்கான எமிஸ் பக்கத்தில் பதிவாகும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வட்டார, மாவட்ட அளவிலான தேர்வுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறுவோர் ஆண்டுதோறும் வெளிநாடு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இக்கல்வியாண்டு துவங்கி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஆன்லைன் தேர்வுகள் நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

    வினாத்தாள் தயாரித்தல், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முதற்கட்ட தேர்வை அனைத்து பள்ளிகளிலும் நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலை ப்பள்ளிகளில் உள்ள ஹைடெக் ஆய்வகத்தில் இத்தேர்வு நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யுமாறு தலைமை யாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தினசரி வகுப்பில் சொல்லி தர வேண்டிய செயல்பாடுகள் அட்டவணைப்படுத்தப்படும்.
    • அதிக மாணவர்கள் படிப்பதால் 10 பேருக்கு ஒரு டேப் வீதம், பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    எண்ணும் எழுத்தும் திட்டத்தை, ஐந்தாம் வகுப்பு வரை விரிவுப்படுத்துவதால் ஆன்லைன் தேர்வு நடைமுறைகளுக்கு டேப்லெட் வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கொரோனாவுக்கு பின் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளி குறைக்க கடந்த ஆண்டு மூன்றாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.இத்திட்டத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், 10 சதவீதம் மட்டுமே கையாளப்படுகிறது. மீதமுள்ள 90 சதவீதத்திற்கு எண்ணும் எழுத்தும் திட்ட, பயிற்சி கையேடு மட்டுமே சொல்லி தரப்படும். தினசரி வகுப்பில் சொல்லி தர வேண்டிய செயல்பாடுகள் அட்டவணைப்படுத்தப்படும்.

    இத்திட்டத்தை சிறப்பாக தொடர மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப டேப்லெட் கம்ப்யூட்டர் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. எண்ணும் எழுத்தும் திட்ட முதன்மை கருத்தாளர்கள் கூறுகையில், எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு வாரம் ஒருநாள் எழுத்துத்தேர்வு நடத்த வேண்டும். ஆன்லைன் தேர்வாக நடத்தி இயக்குனரகத்தில் இருந்து மாணவர்களின் கற்றல் திறன் மதிப்பிடப்படுகிறது.

    இதை ஆசிரியர்களின் மொபைல் போன் வழியாக மேற்கொள்ள சிரமமாக உள்ளது.5-ம் வகுப்பு வரை, விரிவுப்படுத்தப்பட்ட நிலையில் அதிக மாணவர்கள் படிப்பதால் 10 பேருக்கு ஒரு டேப் வீதம், பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதால் டேப் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்றனர்.

    மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் ஆண்டுக்கு 2 தடவை ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #NEET #HRDMinistry
    புதுடெல்லி:

    மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்தது. மேலும், நீட் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நீட், ஜேஈஈ, நெட் தேர்வு ஆகிய தேர்வுகள் நடக்கும் தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில், நீட் தேர்வு அடுத்தாண்டு மே மாதம் 5-ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு ஆன்லைன் முறையில் இல்லாமல் பேப்பர், பேனா அடிப்படையிலேயே நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ×