search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் 8.23 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

    மாவட்டத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் வரும் 21-ந்தேதி வரை முகாம் நடக்கிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 8.23 லட்சம் குழந்தைகள் மற்றும் 2 லட்சம் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோக முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    மாவட்டத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் வரும் 21-ந்தேதி வரை நடக்கிறது. ஒன்று முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரை வழங்கப்படும். 

    இரண்டு முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வரை வயதுடைய பெண்களுக்கு (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) அல்பெண்டசோல் ஒரு மாத்திரை வழங்கப்படுகிறது.

    இதன்மூலம் குடற்புழு தொற்றினால் ஊட்டசத்து குறைபாடு, சோர்வு, சுகவீனம் படிப்பில் கவனமின்மை, பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகள் குணமாகும். காலை அல்லது மதியம் உணவு உண்டபின் அரைமணிநேரம் கழித்து இம்மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.

    இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது எனவும், பெண்கள், குழந்தைகள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறும் கலெக்டர் வினித் அறிவுறுத்தினார். அப்போது சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் உடன் இருந்தார்.
    Next Story
    ×