search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் வேணுவனத்தில் சுவாமி சுயம்புவாக அவதரித்த தின விழா நடந்த போது எடுத்த படம்.
    X
    நெல்லையப்பர் கோவிலில் வேணுவனத்தில் சுவாமி சுயம்புவாக அவதரித்த தின விழா நடந்த போது எடுத்த படம்.

    நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா- வேணு வனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் நிகழ்ச்சி

    நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று வேணு வனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லையப்பர் -காந்திமதி அம்மாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    தினமும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவிழாவின் 4-ம் நாளான இன்று வேணுவனத்தில் சுவாமி நெல்லையப்பர் தோன்றிய வரலாற்று திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


    தொடர்ந்து மாலை 6 மணிக்கு உடையவர் லிங்கபூஜையும், 7 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷபவாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 

    இதற்கிடையே நெல்லையில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நெல்லையப்பர் கோவிலில் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் சுவாமி சிலைகள், இசைத்தூண்கள், கல்வெட்டுகளை பார்த்து ரசித்தனர்.

    Next Story
    ×